பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் தரவரிசை: 3 ஆண்டுகளுக்கு பின் டாப்-5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் பிவி சிந்து!

இந்தியாவின் பிவி சிந்து, பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, பெண்களுக்கான உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்துள்ளார்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார் பிவி சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கரோலினா மரினை பின்னுக்குத் தள்ளி பிவி சிந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசையில் எச்.எஸ்.பிரணாய் 12வது இடத்திற்கு முன்னேறினார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 12வது இடத்தில் உள்ளார். லக்சயா சென் 8வது இடத்தில் உள்ளார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்