பிற விளையாட்டு

கத்தார் ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை முசோவா சாம்பியன்

செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் நாட்டின் கரோலினா முசோவா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய முசோவா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.