பிற விளையாட்டு

இந்தியாவின் 70வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக்; விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து

கடந்த மாதம் இந்தியாவின் 69வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை புனேவின் ஹர்ஷித் ராஜா பெற்றது குறிப்பிடத்தக்கது.

செஸ் போட்டிகளில் "கிராண்ட் மாஸ்டர் " பட்டம் உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. இதை அடைய ஒரு வீரர் 2500 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெறவேண்டும் . இந்தியாவின் ராஜா ரித்விக் ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் தொடரின் 4- வது சுற்றின் முடிவில் 2500 ரேட்டிங் புள்ளியை எட்டினார் . இதன் மூலம் இந்தியாவின் 70வது கிராண்ட் மாஸ்டர் என்னும் சிறப்பை அவர் பெற்றார் .

ராஜா ரித்விக் தொடரின் 4-வது சுற்றில் செக்குடியரசு வீரர் வெக்லாவ்யை வீழ்த்தியதன் மூலம் கிராண்ட்மாஸ்டரானார். 17 வயதே ஆன ராஜா ரித்விக் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் . அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை உயர்வதை நினைத்து பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார் .

கடந்த மாதம் இந்தியாவின் 69வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை புனேவின் ஹர்ஷித் ராஜா பெற்றது குறிப்பிடத்தக்கது..

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்