பிற விளையாட்டு

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரவி தாஹியா தங்கம் வென்றார்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், ரவி தாஹியா தங்கம் வென்றார்.

புதுடெல்லி,

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய நட்சத்திர வீரரும், நடப்பு சாம்பியனுமான பஜ்ரங் பூனியா, தொடக்ககட்ட சுற்றுகளில் அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு வந்தார். ஆனால் இறுதி ஆட்டத்தில் அவர் 2-10 என்ற புள்ளி கணக்கில் ஜப்பானின் தகுட்டோ ஒட்டோகுரோவிடம் பணிந்தார். 2018-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் இதே தகுட்டோவிடம் தான் பஜ்ரங் தோற்று இருந்தது நினைவு கூரத்தக்கது. பஜ்ரங் பூனியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதன் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரவி தாஹியா 10-0 என்ற புள்ளி கணக்கில் ஹிக்மாட்டுல்லோவை (தஜிகிஸ்தான்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். மற்ற இந்திய வீரர்களான சத்யவாட் காடியன் (97 கிலோ), கவுரவ் பாலியன் (79 கிலோ) ஆகியோர் தங்களது இறுதி ஆட்டங்களில் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திப்பட்டு கொண்டனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்