பிற விளையாட்டு

உபேர் கோப்பை பேட்மிண்டனில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி விலகல்

உபேர் கோப்பை இரட்டையர் பிரிவில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி நேற்று விலகியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் மே 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டிக்குரிய இந்திய அணியில் இரட்டையர் இணையான சிக்கி ரெட்டி, அஸ்வினி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.

இந்த நிலையில் சிக்கி ரெட்டிக்கு வயிற்று பகுதியில் தசை நார் கிழிவு ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. எனவே அவரை 4-6 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் உபேர் கோப்பை இரட்டையர் பிரிவில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி நேற்று விலகியது. அவர்களுக்கு பதிலாக சிம்ரன் சிங், ரித்திகா தாக்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்