மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (image courtesy: Formula 1 twitter via ANI)  
பிற விளையாட்டு

பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்று போட்டி - இன்று நடக்கிறது

பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி சுசூகா ஓடுதளத்தில் இன்று நடைபெறுகிறது.

தினத்தந்தி

சுசூகா,

இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் 3 சுற்றுகள் முடிவில் நடப்பு சாம்பியன் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 51 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த நிலையில் பார்முலா1 கார் பந்தயத்தின் 4-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்குள்ள சுசூகா ஓடுதளத்தில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. 307.471 கிலோ மீட்டர் தூர பந்தயத்தில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நேற்று நடந்த இறுதி தகுதி சுற்று முடிவில் முதலிடத்தை சொந்தமாக்கிய மேக்ஸ் வெர்ஸ்டப்பென் போட்டியில் முதல் வரிசையில் இருந்து தனது காரை செலுத்துவார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து