பிற விளையாட்டு

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கு ரூ.1½ கோடி நிதியுதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

ரூ.1½ கோடிக்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன ஆயுட்கால தலைவர் என்.ராமச்சந்திரனிடம் நேற்று வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் ஸ்குவாஷ் அகாடமியில் நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்பட 9 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணியில் தேசிய சாம்பியன்களான அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா, சவுரவ் கோஷல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த போட்டியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதற்கட்ட நிதியுதவியாக ரூ.1 கோடிக்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன ஆயுட்கால தலைவர் என்.ராமச்சந்திரனிடம் நேற்று வழங்கினார்.

சமீபத்தில் நடந்த சுதிர்மன் கோப்பை பேட்மிண்டனில் ஏமாற்றிய இந்திய வீரர்கள் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த போட்டியில் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை