மாஸ்கோ,
அமெரிக்கவின் புகழ்பெற்ற கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர். இவர் இரண்டு முறை ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க கூடைப்பந்து அணிகளில் இடம் பெற்றிருந்தவர்.
இவரை கடந்த மாதம் கைதுசெய்துள்ளதாக ரஷ்ய சுங்கத்துறை தற்பேது அறிவித்துள்ளது. இவர் தனது பெட்டியில் திரவ வடிவ பேதைப்பெருளை வைத்திருந்ததாக கூறி அவரை ரஷ்ய சுங்க அதிகாரிகள் இவரை கைது செய்துள்ளனர்.
இதைத் தெடர்ந்து தங்கள் நாட்டு வீராங்கனையை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவி வரும் சூழலில் தற்போது அமெரிக்கா வீராங்கனை ஒருவரை ரஷியா கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.