பிற விளையாட்டு

"மனைவியை போல நடந்து கொள்" பயிற்சியாளர் மீது சைக்கிளிங் வீராங்கனை பாலியல் புகார்

இந்திய சைக்கிளிங் வீராங்கனை ஒருவர், இந்திய பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா மீது பாலியல் ரீதியான புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்திய அணியின் மூத்த சைக்கிளிங் வீராங்கனை ஒருவர் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் அணியின் பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

"பயிற்சியாளர் என்னை அவருடன் ஒரே அறையில் தங்குமாறு வற்புறுத்தினார். அவரது மனைவியை போல நான் நடந்து கொள்ளுமாறு சொன்னார்" என புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மே 29-ஆம் தேதியன்று நடைபெற்றதாக அந்த வீராங்கனை தெரிவித்துள்ளார். ஜூன் 3-ஆம் தேதி அன்று அவர் நாடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5 வீரர்கள் மற்றும் ஒரே ஒரு வீராங்கனை அடங்கிய இந்திய சைக்கிளிங் அணி ஸ்லோவேனியாவிற்கு சென்றிருந்தது. வரும் 14-ஆம் தேதி வரையில் பயிற்சி மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தப் பயணத்தில் பெண் பயிற்சியாளர் யாரும் பயணம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில்தான் பாலியல் புகாரை அளித்துள்ளார் அந்த வீராங்கனை.

இதுகுறித்து இந்திய விளையாட்டு ஆணையம் கூறியதாவது:-

வீராங்கனையின் புகாரை தொடர்ந்து முதலில் அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவரை இந்தியாவிற்கு திரும்ப செய்துள்ளோம். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைத்துள்ளோம். இதுகுறித்து விரைவாக விசாரித்து சிக்கலுக்கு தீர்வு காண உள்ளோம் என தெரிவித்துள்ளது.

விசாரணை தொடர்பாக இரண்டு குழுக்கள்அமைக்கப்பட்டு உள்ளது. ஒன்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் குழு, மற்றொன்று இந்திய சைக்கிள் கூட்டமைப்பின் விசாரணை குழு.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை