பிற விளையாட்டு

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதியில் சாய்னா தோல்வி

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார்.

தினத்தந்தி

கோலாலம்பூர்,

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்பெயின் நாட்டைச்சேர்ந்த 3 முறை உலக சாம்பியனான கரோலினா மரினை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், போட்டி முழுவதும் கரோலினா மரினே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில், 16-21, 13-21 என்ற செட் கணக்கில் சாய்னா தோல்வி அடைந்து போட்டித்தொடரில் இருந்து வெளியேறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்