பிற விளையாட்டு

இந்தியாவின் 71 வது செஸ் கிராண்ட் மாஸ்டர் சங்கல்ப் குப்தா : விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து

இந்த சாதனையின் மூலம் ரவுனக் சத்வானிக்குப் பிறகு நாக்பூர் நகரத்தைச் சேர்ந்த இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார் சங்கல்ப் குப்தா.

தினத்தந்தி

செர்பியா

செஸ் போட்டிகளில் "கிராண்ட் மாஸ்டர் " பட்டம் உயரிய ஒன்றாக கருதப்படுகிறது. இதை அடைய ஒரு வீரர் 2500 எலோ புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெறவேண்டும் . இந்தியாவின் சங்கல்ப் குப்தா சேர்பியாவில் நடைபெற்ற செஸ் தொடரில் 2500 புள்ளிகளை அடைந்ததன் மூலம் கிராண்ட் மாஸ்டர் ஆக முடிசூட்டப்பட்டார்.

இதன் மூலம் இந்தியாவின் 71வது கிராண்ட் மாஸ்டர் என்னும் சிறப்பை அவர் பெற்றார் .18 வயதான சங்கல்ப் குப்தா நாக்பூரை சேர்ந்தவர். இந்த சாதனையின் மூலம் ரவுனக் சத்வானிக்குப் பிறகு நாக்பூர் நகரத்தைச் சேர்ந்த இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார் சங்கல்ப் குப்தா.

அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , இந்தியாவின் செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டியலுக்குள் நுழைந்துள்ள சங்கல்ப் குப்தாவுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் இந்தியாவின் 69வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்னும் பெருமையை புனேவின் ஹர்ஷித் ராஜா வும் கடந்த மாதம் இந்தியாவின் 70 வது செஸ் கிராண்ட்மாஸ்டர் எனும் பெருமையை தெலுங்கானாவின் ராஜா ரித்விக்கும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது