பிற விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 3 தங்கம் ,1 வெள்ளி என 4 பதக்கங்களை வென்றார்

காமன்வெல்த் போட்டி 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து முடிவடைந்தது.12 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா சார்பில் 210 வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என்று மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. 

இந்த போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்  3 தங்கம் ,1 வெள்ளி என 4 பதக்கங்களை வென்றார்.இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் முதலில் டேபிள் டென்னிஸ் ஆடவர் குழு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் சக தமிழக வீரர் சத்யன் உடன் இணைந்து வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா-வுடன் இணைந்து மற்றொரு தங்கமும் வென்றார்.இதை தொடர்ந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அவர் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் சரத் கமல் இன்று சென்னை திரும்பினார்.சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்