பிற விளையாட்டு

சர்வதேச டேபிள் டென்னிஸ்: சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடி “சாம்பியன்”

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடியினர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

தினத்தந்தி

துனிசியா,

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டிகள் துனிசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஜி.சத்யன்-ஹர்மீத் தேசாய் ஜோடியினர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

இறுதி சுற்றில் இவர்கள் 11-9, 4-11, 11-9, 11-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் எமானுவல் லெப்சன்- அலெக்சாண்டர் கேசின் இணையை வீழ்த்தினர். இது குறித்து தமிழகத்தை சேர்ந்த சத்யன் கூறுகையில், சர்வதேச டேபிள் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தான் வென்ற முதல் பட்டம் இது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு