Image Courtacy: PTI 
பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் சத்யன் முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சத்யன் 60-வது இடத்தை பிடித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் வி.சத்யன் 43 இடங்கள் எகிறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் லெபனானில் நடந்த பீடெர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதால் தமிழகத்தை சேர்ந்த சத்யன் இந்த ஏற்றத்தை கண்டுள்ளார். இந்திய மூத்த வீரர் சரத்கமல் ஒரு இடம் சறுக்கி 35-வது இடம் வகிக்கிறார். இந்திய வீரர்களில் அவர் தான் முதலிடத்தில் இருக்கிறார். மற்ற இந்தியர்களான மனவ் தாக்கர் 11 இடங்கள் முன்னேறி 63-வது இடமும், ஹர்மீத் தேசாய் 2 இடம் சரிந்து 67-வது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 38-வது இடத்தில் நீடிக்கிறார். பீடெர் சீரிஸ் போட்டியில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 7 இடங்கள் உயர்ந்து தனது சிறந்த தரநிலையாக 40-வது இடத்தை பிடித்துள்ளார். அர்ச்சனா காமத் 13 இடங்கள் உயர்ந்து 99-வது இடத்தில் உள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை