பிற விளையாட்டு

துப்பாக்கிசுடுதல் போட்டி; தங்கம் வென்ற இந்தியா..! வெண்கலம் வென்ற ரஷிய கொடி அகற்றம்...!

உக்ரைன் மீதான தொடர்ச்சியான போர் காரணமாக புள்ளிபட்டியலில் இருந்து ரஷியாவின் கொடி அகற்றப்பட்டது.

கெய்ரோ,

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளத்தின் சார்பாக நடத்தப்படும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டி எக்பிதில் உள்ள கெய்ரோ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்தியாவின் 19 வயதான சவுரப் சவுத்ரி ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் மொத்தம் 584 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தார். பின்னர் காலிறுதி சுற்றில் இருந்து முதல் வீரராக அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார்.

இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் இறுதி போட்டியில் சவுரப் சவுத்ரி 16-6 என்ற கணக்கில் ஜெர்மனியின் மைக்கேல் ஸ்வால்டை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் ரஷியாவின் ஆர்டெம் செர்னோசோவ் வெண்கல பதக்கம் வென்றார் .

இருப்பினும் உக்ரைன் மீதான தொடர்ச்சியான போர் காரணமாக புள்ளிபட்டியலில் இருந்து ரஷியாவின் கொடி அகற்றப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை