பிற விளையாட்டு

வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!

அசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது.

தினத்தந்தி

கவுகாத்தி

அசாமின் சபுயாவில் அந்த மாநிலத்திற்கான விளையாட்டு அமைப்பு உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று 12 வயதிற்கான சிறுவர் மற்றும் சிறுமிகள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு தவறுதலாக அங்கிருந்து சிவாங்கினி கோகின் என்ற 12 வயது சிறுமியின் வலதுகை தோள்பட்டையில் பாய்ந்தது.

இதனால் வலியால் துடித்த அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு எலும்பை துளைத்துள்ளது. தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை