Image : SAI Media 
பிற விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை வெண்கலம் வென்றார்

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்

தினத்தந்தி

.பாகு,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது.இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இன்று நடந்த போட்டியில்  இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதனால் இந்திய வீராங்கனை மெஹீலி கோஷ் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுவரை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து மெஹீலி கோஷ் கூறியதாவது ,

நான் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன். இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தையும்,பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதையும் பெருமையாக கருதுகிறேன் என  தெரிவித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு