பிற விளையாட்டு

இளையோர் ஒலிம்பிக் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்

இந்தோனேசியாவில் நடந்து வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் இந்திய வீரர் லக்சயா சென் வெள்ளி பதக்கம் வென்றார்.

பியூனஸ் அயர்ஸ்,

இந்தோனேசியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் மற்றும் சீனாவின் லி ஷிபெங் விளையாடினர்.

இந்த போட்டியில் ஜூனியர் ஆசிய சாம்பியனான சென் 15-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் ஷிபெங்கிடம் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஜூலையில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் நேர் செட் கணக்குகளில் சென், ஷிபெங்கை வென்றார்.

இந்நிலையில் 42 நிமிடங்கள் நடந்த இளையோர் ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் இறுதி போட்டியில் ஷிபெங் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இந்த போட்டியில் சென் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்