சோர்ஜோ,
சிலேசியா டைமண்ட் லீக் தடகள போட்டி போலந்தில் உள்ள சோர்ஜோவில் நேற்று நடந்தது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கிஷானே தாம்சன் (ஜமைக்கா) 9.87 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் நோவா லைல்ஸ் (9.90 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும், கென்னி பெட்னரெக் (9.96 வினாடி) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். பாரீஸ் ஒலிம்பிக்கில் தாம்சனை பின்னுக்கு தள்ளிய நோவா லைல்ஸ் இப்போது அவரிடம் வீழ்ந்துள்ளார்.