image courtesy: Norway Chess via ANI 
பிற விளையாட்டு

சின்க்பீல்ட் கோப்பை செஸ்: 5வது சுற்று ஆட்டத்திலும் டிரா கண்ட குகேஷ், பிரக்ஞானந்தா

சின்க்பீல்ட் கோப்பை செஸ் தொடரின் 5வது சுற்று ஆட்டம் முடிவில் குகேஷ் 4வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

தினத்தந்தி

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் டூரில் இந்த ஆண்டுக்கான கடைசி தொடரான சின்க்பீல்ட் கோப்பை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் 5வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த 5வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் வெஸ்லி சோ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 107வது காய் நகர்த்தலின் போது இந்த ஆட்டம் டிரா ஆனது.

இதே போல் மற்றொரு இந்திய வீரரான குகேஷ், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நோடிர்பெக் அப்துசட்டோரோவுக்கு எதிராக ஆடினார். இந்த ஆட்டம் 46வது காய் நகர்த்தலின் போது டிரா ஆனது. இந்த தொடரில் இதுவரை 5 சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன.

இந்த 5 சுற்று ஆட்டங்களின் முடிவில் குகேஷ் 2.5 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், பிரக்ஞானந்தா 2.5 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளனர். இதுவரை நடந்துள்ள 5 சுற்று ஆட்டங்களிலும் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 6வது சுற்று ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை