பிற விளையாட்டு

தெற்காசிய விளையாட்டு போட்டி: டிரையத்லானில் இந்தியாவுக்கு 4 பதக்கம்

தெற்காசிய விளையாட்டு போட்டியின், டிரையத்லானில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது.

தினத்தந்தி

போக்ஹரா,

தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த டிரையத்லான் (750 மீட்டர் நீச்சல், 20 கிலோ மீட்டர் தூர சைக்கிளிங், 5 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தை உள்ளடக்கியது) பந்தயத்தில் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீரர் ஆதர்ஷா எம்.என்.சினிமோல் 1 மணி 2 நிமிடம் 51 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் பிஷ்வோர்ஜித் 1 மணி 2 நிமிடம் 59 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். நேபாள வீரர் பசந்தா தாரு வெண்கலப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை சரோஜினி 1 மணி 14 நிமிடத்தில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதில் நேபாள வீராங்கனை சோனி குருங் 1 மணி 13 நிமிடம் 45 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரகன்யா 1 மணி 14 நிமிடம் 57 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் இலங்கையையும், பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையையும் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்