பிற விளையாட்டு

தென் மண்டல கூடைப்பந்து: தமிழக பெண்கள் அணி முதல் தோல்வி

தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது

71-வது தென் மண்டல கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி 54-93 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவிடம் பணிந்தது. தெலுங்கானா அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 66-40 என்ற புள்ளி கணக்கில் புதுச்சேரியை தோற்கடித்து 3-வது வெற்றியை பெற்றது. இதேபோல் தமிழக அணி 91-40 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 4-வது வெற்றியை தன்வசப்படுத்தியது. தமிழக அணியில் அரவிந்த் குமார் 17 புள்ளியும், கார்த்திக் 15 புள்ளியும், லோகேஸ்வரன் 12 புள்ளியும் சேர்த்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்