பிற விளையாட்டு

சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா-அனாஹத்

இன்று நடக்கும் இறுதிசுற்றில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, டெல்லியை சேர்ந்த அனாஹத் சிங்குடன் மோதுகிறார்.

தினத்தந்தி

சென்னை,

எச்.சி.எல். இந்திய சுற்றுப்பயண சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் 4-வது சுற்று சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 6-11, 12-10, 11-1, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான தன்வி கண்ணாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 11-8, 11-6, 11-4 என்ற நேர்செட்டில் தென்ஆப்பிரிக்காவின் ஹெய்லி வார்டை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடக்கும் இறுதிசுற்றில் தமிழகத்தின் ஜோஸ்னா சின்னப்பா, டெல்லியை சேர்ந்த அனாஹத் சிங்குடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் 13-11, 11-9, 5-11, 11-7 என்ற செட் கணக்கில் பிரான்சின் மாகோ லெவியை விரட்டியடித்து இறுதிப்போட்டியை எட்டினார். அவர் மகுடத்துக்கான ஆட்டத்தில் ஆதம் ஹவாலை (எகிப்து) எதிர்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை