பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து: இந்தியன் வங்கி அணி அரைஇறுதிக்கு தகுதி

மாநில கூடைப்பந்து போட்டியில், இந்தியன் வங்கி அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 82-49 என்ற புள்ளி கணக்கில் சுங்க இலாகா (சென்னை) அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்தியன் வங்கி அணியில் முய்ன்பெக் 24 புள்ளியும், ஹரிராம் 21 புள்ளியும் குவித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 97-91 என்ற புள்ளி கணக்கில் விளையாட்டு விடுதி (சென்னை) அணியை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியில் பிரசன்னா வெங்கட், பிரதாம் சிங் தலா 26 புள்ளிகள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சங்கம் கிளப் அணி (சென்னை) 69-38 என்ற புள்ளி கணக்கில் எத்திராஜ் கல்லூரியை சாய்த்து அரைஇறுதியை எட்டியது. சங்கம் கிளப் அணியில் ஸ்ரீவித்யா 13 புள்ளியும், தேவி ராஜலட்சுமி 11 புள்ளியும் எடுத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு