பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து போட்டி: இந்தியன் வங்கி அணி ‘சாம்பியன்’

மாநில கூடைப்பந்து போட்டியில், இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தினத்தந்தி

சென்னை,

ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 25-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 79-61 என்ற புள்ளி கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வருமான வரி அணி 2-வது இடத்தையும், ஐ.சி.எப். அணி 3-வது இடத்தையும், அரைஸ் ஸ்டீல் அணி 4-வது இடத்தையும் பெற்றன.

பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்துஸ்தான் அணி 64-58 என்ற புள்ளி கணக்கில் அரைஸ் ஸ்டீல் அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. அரைஸ் ஸ்டீல் அணி 2-வது இடத்தையும், சங்கம் அணி 3-வது இடத்தையும், ரைசிங் ஸ்டார் அணி 4-வது இடத்தையும் பிடித்தன. சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற அணிகளுக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிகளுக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்