சென்னை,
ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் சார்பில் 16-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரைசிங் ஸ்டார் அணி 67-31 என்ற புள்ளி கணக்கில் ஐ.சி.எப். காலனியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
மற்றகால் இறுதி ஆட்டங்களில் சங்கம் அணி 61-40 என்ற புள்ளி கணக்கில் ஜேப்பியார் இன்ஸ்டிடியூட்டையும், காமிலுஸ் அணி 43-17 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் நேஷனல்ஸ் அணியையும், இந்துஸ்தான் ஜாமெர்ஸ் 58-36 என்ற புள்ளி கணக்கில் அர்பன் அணியையும் வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.