பாசெல்,
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் தருண் மன்னேபள்ளி, இந்தோனேசியாவின் அந்தோணி சினிசுகா ஜின்டிங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் தருண் 19-21, 21-19, 13-21 என்ற செட் கணக்கில் அந்தோணி சினிசுகாவிடம் வீழ்ந்தார். இதன் மூலம் இந்த போட் டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.