கோப்புப்படம்: Badminton Association of India via ANI 
பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி..!

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி போட்டி ஒன்றில் ஸ்ரீகாந்த், ஜோனதான் கிறிஸ்டி மோதினார்.

தினத்தந்தி

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியுடன் மோதினார்.

55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 21-18 என்ற கணக்கில் முதல் செட்டை ஸ்ரீகாந்த், தன்வசமாக்கினார். எனினும் அடுத்த இரண்டு செட்டையும் கிறிஸ்டி 21-7, 21-13 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோத இருக்கிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு