கோப்புப்படம்  
பிற விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா- காயத்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பாசெல்,

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.

இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த் இணை, ஹாங் காங்கின் யூங் புய் லாம் - யூங் ந்கா டிங் இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய திரிஷா- காயத்ரி ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் யூங் புய் லாம் - யூங் ந்கா டிங் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்