பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.

தினத்தந்தி

லக்னோ,

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் விளாடிமிர் மால்கோவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 36 நிமிடங்கள் நடந்தது.

இந்திய வீரர் காஷ்யப்பை எதிர்த்து ஆட இருந்த பிரான்சின் லுகாஸ் கோர்வீ விலகியதால் விளையாடாமலேயே காஷ்யப் 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். காஷ்யப் அடுத்து ஸ்ரீகாந்தை சந்திக்கிறார். இந்தியாவின் சாய் பிரனீத், லக்ஷயா சென், பிரனாய் உள்ளிட்டோரும் 2-வது சுற்றை எட்டினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு