பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

முன்னதாக டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்கொண்டார். முதல் நான்கு கேம்ஸ்களையும் 11-7, 11-6, 12-10, 11-9 என கைப்பற்றி கிரேட் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுவை 4-3 என்ற செட் கணக்கில் (11-5, 9-11, 13-11, 11-9, 3-11, 9-11, 5-11) வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு