பிற விளையாட்டு

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் - டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் வழங்கினார்

டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவி செய்யும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அர்ஜுனா விருது சென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரன், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட சத்யன் ஞானசேகரன் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு