பிற விளையாட்டு

கேலோ இந்தியா விளையாட்டில் பதக்கங்களை குவிக்கும் தமிழ்நாடு

கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.

தினத்தந்தி

சென்னை, 

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெறுகிறது.

இதில் 8-வது நாளான நேற்று சென்னையில் பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் தமிழக வீரர் எல். தனுஷ் மொத்தம் 225 கிலோ எடை தூக்கி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நிகில் கோலி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

துப்பாக்கி சுடுதல் டிராப் கலப்பு அணிகள் பிரிவில் தமிழகத்தின் நிலா ராஜா பாலு- யுகன் ஜோடி 125 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றது. ராஜஸ்தானின் வினய் பிரதாப் சிங்- ஐஸ்வரி சவுத்ரி இணைக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த கைப்பந்து போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது. தமிழக ஆண்கள் அணி  ராஜஸ்தானை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. மேலும் தமிழக பெண்கள் அணி  சத்தீஸ்கர் அணியை வென்று அரையிறுதியை உறுதி செய்தது.

தற்போது பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 26 தங்கம் உள்பட மொத்தம் 62 பதக்கங்கள் குவித்து 2-வது இடத்தில் தொடர்கிறது. முதலிடத்தில் மராட்டியம் உள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்