பியாங்சாங்,
தென்கொரியா நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பெண்களுக்கான பனிச்சறுக்கு போட்டி பியாங்சங் நகரில் நடந்தது. இந்த போட்டியில் அமெரிக்க நாட்டின் 17 வயது நிறைந்த குளோ கிம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
அவருக்கு அடுத்து 2வது இடத்தில் சீனாவின் ஜியாயூ லியூ வெள்ளி பதக்கமும் மற்றும் அமெரிக்காவின் ஏரியல் கோல்டு வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.