பிற விளையாட்டு

புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது

புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதியை போட்டி அமைப்பு குழு நேற்று அறிவித்தது. இதன்படி ஆமதாபாத்தில் அக்டோபர் 14-ந் தேதி 2 வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நடக்கிறது. முதலாவது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3-வது, 6-வது இடம் பிடிக்கும் அணிகளும், 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 4-வது, 5-வது இடம் பிடிக்கும் அணிகளும் மோதும். ஆமதாபாத்தில் அக்டோபர் 16-ந் தேதி 2 அரைஇறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது. முதலாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெறும் அணியும், முதலாவது வெளியேற்றுதல் சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணியும், இரண்டாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெறும் அணியும், 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியும் சந்திக்கும். இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் அக்டோபர் 19-ந் தேதி நடக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது