லூதியானா,
பிரபல மல்யுத்த வீரர் கிரேட் காளி என்ற தலீப் சிங் ராணா. பஞ்சாப் போலீசில் அதிகாரியாக பணியாற்றிய காளி பின்பு கடந்த 2000ம் ஆண்டு, டபிள்யூ.டபிள்யூ.இ. எனப்படும் தொழில் முறை மல்யுத்த போட்டியில் முதன்முறையாக கலந்து கொண்டார்.
டபிள்யூ.டபிள்யூ.இ. சாம்பியன் பட்டம் வென்றுள்ள காளி 4 ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் 2 பாலிவுட் திரைப்படங்களில் நடித்து உள்ளார்.
இவரது தாயார் தண்டி தேவி (வயது 75). உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த வாரம் லூதியானா நகரில் உள்ள தயானந்த் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தன.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.