பிற விளையாட்டு

இந்த நான்கு அணிகள்தான் அரையிறுதிக்கு செல்லும் - சச்சின் டெண்டுல்கர் கணிப்பு

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் இவைதான் என்று சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

தினத்தந்தி

ஆமதாபாத்,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கியது. இந்த தொடர் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வென்றது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் இவைதான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.

அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று அவர் கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்