பிற விளையாட்டு

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: கால்இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

டென்மார்க்கில் நடந்து வரும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியுள்ளது.

தினத்தந்தி

ஆர்ஹஸ்,

தாமஸ், உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான தாமஸ் கோப்பை போட்டியில் சி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் தஹிதியை சந்தித்தது. இதில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் தஹிதியை பந்தாடியது. ஒற்றையரில் சாய் பிரனீத், சமீர் வர்மா, கிரண் ஜார்ஜ் ஆகியோரும், இரட்டையரில் கிருஷ்ண பிரசாத்-விஷ்ணு வர்தன், சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடியினரும் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தனர்.

முதலாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இருந்த இந்திய அணி 2-வது வெற்றியை பெற்றதுடன் கால்இறுதிக்கும் முன்னேறியது. 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும். பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டியில் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 0-5 என்ற கணக்கில் வலுவான தாய்லாந்திடம் சரண் அடைந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து