பிற விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற உகாண்டா நாட்டு வீரர் டோக்கியோவில் மாயம்

ஜப்பானில் காணமல் போன உகாண்டா நாட்டு ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

டோக்கியோ

20 வயதான உகாண்டா பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ளார். மேற்கு ஜப்பானின் ஒசாகாவில் உள்ள இசுமிசானோ என்ற நகரத்தில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை நேற்று நள்ளிரவு முதல் காணவில்லை. கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.

உகாண்டாவில் வாழ்வது கடினமாக இருப்பதால், ஜப்பானில் தங்கி வேலை செய்ய விரும்புவதாக ஒரு கடிதம் அவர் எழுதி வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அருகிலுள்ள ரெயில் நிலையம் அவர் மத்திய ஜப்பானில் உள்ள நகோயாவுக்கு புல்லட் ரெயிலில் ஏற டிக்கெட் வாங்கியதை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செகிடோலெக்கோ தகுதி பெறவில்லை, அடுத்த செவ்வாயன்று உகாண்டாவுக்கு திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து