கோப்பு படம் 
பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை

டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன. இறுதி நாளான இன்று கடைசி தடகள போட்டியாக மாரத்தான் போட்டி நடந்தது.

இதில், 42 கிலோ மீட்டர் தூர இலக்கை கொண்ட ஆடவர் பிரிவு போட்டியில், மொத்தம் 106 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 76 பேர் மட்டுமே இலக்கை கடந்தனர்.

இந்த போட்டியில், கென்ய வீரர் எலியட் கிப்சாஜ், 2 மணி நேரம் 8 நிமிடம், 38 வினாடிகளில் இலக்கை கடந்து, முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். நெதர்லாந்து வீரர் அப்தி நாகியே 2வது இடமும், பெல்ஜியம் வீரர் பஷீர் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

கென்ய வீரர் எலியட் கிப்சாஜ், தொடர்ந்து 2வது முறை ஒலிம்பிக் மாரத்தானில் தங்க பதக்கம் வென்று சாதித்துள்ளார். அதனுடன், ஒலிம்பிக் மாரத்தானில் தொடர்ந்து 2வது முறை பதக்கம் வென்ற 3வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன் எத்தியோப்பியாவின் அபிபி பிகிலா, ஜெர்மனியின் சியர்பின்ஸ்கி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

இதேபோன்று மகளிருக்கான மாரத்தான் போட்டியில் கென்யா நாட்டின் பெரஸ் ஜெப்சிர்சீர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார். இதனால், கென்யாவுக்கு ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு மாரத்தான் போட்டிகளில் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை