பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 8வது நாளான இன்று மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர்.

இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து