பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் தீபக் பூனியா தோல்வி; வெண்கலம் கைநழுவியது

டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் 86 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா தோல்வி அடைந்துள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், மல்யுத்த போட்டியின் ஆடவர் 86 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் தீபக் பூனியா (வயது 24) மற்றும் சான் மரினோவின் மைலஸ் அமைன் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், 2-4 என்ற புள்ளி கணக்கில் பூனியா தோல்வி அடைந்து உள்ளார். மைலஸ் அமைன் வெண்கல பதக்கம் பெற்று உள்ளார். இதனால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய வெண்கல பதக்கம் கைநழுவி போயுள்ளது.

தொடக்கத்திலேயே 2-0 என்ற கணக்கில் மைலஸ் முன்னிலை பெற்றார். முதல் சுற்றில் வெற்றி கணக்குடன் துவங்கிய மைலசை வீழ்த்த முயன்று அதில் பலனில்லாமல் போனது. 2-1 என்ற கணக்கில் இந்தியா இருந்த நிலையில், 2வது சுற்றில் மைலஸ் அதிரடியாக விளையாடினார். பூனியாவிடம் இருந்து தாக்குதல் ஆட்டம் வெளிப்படாத நிலையில், வெண்கல பதக்கம் மைலசிடம் சென்றுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்