டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளார். இதனால், இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.
பாராஒலிம்பிக் போட்டியின், மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்களை பவினாபென் பட்டேல் இன்று வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரை தொடர்ந்து நிஷாத் குமார் மற்றொரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.