டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை தட்டி சென்றுள்ளனர்.
இன்று ஒரே நாளில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதனால், இந்தியா இதுவரை, ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.