கோப்புப்படம் 
பிற விளையாட்டு

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர் கிருஷ்ணா நாகர்!

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் இறுதிபோட்டிக்கு முன்னேறி உள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகளில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறினார். அடுத்ததாக இந்திய வீரர் மனோஜ் சர்கார் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதனையடுட்து ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுகாஷ் யத்திராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற எஸ்.ஹெச் 6 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் இங்கிலாந்து வீரர் கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து விளையாடினார். அதில், 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு சுற்றுகளையும் கைப்பற்றி போட்டியை வென்றார். இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ள அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை (தங்கம் அல்லது வெள்ளி) உறுதி செய்துள்ளார்.

இதனிடையே இன்று காலை 11.45 மணிக்கு பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது. மேலும் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள எஸ்.எல் 3 பிரிவு பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத், இங்கிலாந்து வீரர் பெத்தேலை எதிர்த்து விளையாட உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து