பிற விளையாட்டு

தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி வழங்கினார்

ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

தினத்தந்தி

சென்னை,

3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைனில் நடந்தது. இதில் தடகளத்தில் நெல்லையைச் சேர்ந்த எட்வினா ஜேசன் 400 மீட்டர் மற்றும் 1,000 மீட்டர் மெட்லே தொடர் ஓட்டத்தில் 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். நேற்று சென்னை திரும்பிய அவருக்கு ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.

இதே போல் சமீபத்தில் ராஞ்சியில் நடந்த 4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்றனர் இவர்களில் மனவ், நந்தினி, ஒலிம்பா ஸ்டெபி, சரண், தினேஷ், ஆதர்ஷ் ராம், பவானி ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து மொத்தம் ரூ.15 லட்சத்தை ஊக்கத்தொகையாக உதயநிதி ஸ்டாலின் அளித்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்