அகமதாபாத்,
முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்க வீரர்கள் இந்தியா வரவுள்ளனர்.
முதன்முறையாக நடைபெறும் உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஏகா அரினா மைதானத்தில் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறுகிறது.
யோகாசனத்தை ஒரு சர்வதேச போட்டி விளையாட்டாக மாற்றுவதற்கும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பதற்கும் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 529 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 114 பேர் பங்கேற்கிறார்கள்.