புதுடெல்லி,
கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் தொடர்களில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இவ்விரு சாம்பியன்ஷிப்களையும் வெல்லும் முதல் இந்திய ஆண் ஸ்ரீகாந்த் ஆவார். இதுவரை ஸ்ரீகாந்த் ஆறு முக்கிய சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
அதன் தொடர்ந்து அவருக்கும் அவருக்கு பயிற்சி அளித்த கோபிசந்திற்கு பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் விஜய் கோயலும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். இன்று நடைபெற்ற விழாவின் போது பாராட்டு சான்றிதழை அவர்களிடம் மத்திய அமைச்சர் வழங்கினார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சர் சமீபத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு பெரிய சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். வெற்றிக்கான பாராட்டுகள் அனைத்தும் கேபிசந்திதையே சேரும். அவரது அகாடமியில் ஸ்ரீகாந்த் பேன்ற பலர் பயிற்சி பெருவதை பார்த்துள்ளேன் என்றார்.
ஸ்ரீகாந்த் இந்திய அரசிற்கும், விளையாட்டு அமைச்சகத்திற்கும், இந்திய விளையாட்டு சங்கத்திற்கும், மத்திய விளையாட்டு துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீகாந்திற்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பேட்மிண்டன் வீரர் விருதும் டைம்ஸ் பத்திரிக்கையின் சிறந்த இந்திய விளையாட்டு வீரர் விருதும் பெற்றுள்ளார்.