புதுடெல்லி,
9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் தொடரின் இந்திய சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் பயிற்சி முகாம் ரூர்கேலாவில் வருகிற 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடக்கிறது. புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டது.
33 பேர் கொண்ட இந்திய உத்தேச ஆக்கி அணியில் முன்னணி வீரர்கள் மன்பிரீத் சிங், கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதூர் பதக், மன்பிரீத் சிங், தில்பிரீத்சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் இருந்து முன்னணி வீரர்கள் மன்பிரீத் சிங், கோல் கீப்பர் கிருஷ்ணன் பகதூர் பதக், மன்பிரீத் சிங், தில்பிரீத்சிங் ஆகியோர் நீக்கப்பட்டதற்கு ஒழுங்கீன செயலே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் தடைசெய்யப்பட்ட பொருளை மற்றொரு வீரருக்கு கொடுத்ததாகவும், இந்த பிரச்சினையின் அடிப்படையிலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.