பிற விளையாட்டு

பெண்கள் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் பிரசிடென்சி அகாடமி வெற்றி

சென்னை மாவட்ட பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது.

தினத்தந்தி

சென்னை,

விழாவுக்கு ரத்னா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். வருமான வரி துணை கமிஷனர் வி.கமலாசினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். சென்னை ஐ.ஐ.டி. துணை பதிவாளர் சித்ராபாவை, எஸ்.டி.ஏ.டி. மண்டல சீனியர் மானேஜர் தங்கநாயகி, சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் நடந்த தொடக்க ஆட்டத்தில் பிரசிடென்சி வாலிபால் அகாடமி-செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் மோதின. இதில் பிரசிடென்சி அகாடமி அணி 25-22, 25-22 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.

இதே மைதானத்தில் நடந்து வரும் பி டிவிசன் லீக் கைப்பந்து போட்டியில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணி 26-28, 25-17, 25-18 என்ற செட் கணக்கில் விஸ்டம் கிளப் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்